ரேக்ளா என்பது தமிழகத்தின் பாரம்பரிய வண்டிப் பந்தயம் ஆகும். இது கிராம விழாக்கள் அல்லது உள்ளூர் நிகழ்வுகளின் போது நடத்தப்படும். இந்த நிலையில், பொள்ளாச்சி - பாலக்காடு நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள், வாகனங்களுக்கு மத்தியில் பந்தயத்தில் ஈடுபட்டன.
ஒரு வாகன ஓட்டி பதிவுசெய்த இந்த வீடியோவில், குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் வேகமாக செல்வதும், அவற்றை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் ஆண்கள் செல்வதும் பதிவாகியுள்ளது. பந்தயத்தின் ஒருகட்டத்தில், ஒரு குதிரை இடறி விழுந்து, வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, அங்கு வந்தவர்கள் குதிரையை எழுப்பி, போக்குவரத்தை நிறுத்தி, காயமடைந்த குதிரையை அங்கிருந்து வேகமாக அப்புறப்படுத்துகின்றனர்.
பாரம்பரியமாக ரேக்ளா போட்டிகள், பாதுகாப்பு அம்சங்களுடன், மூடிய மைதானங்களில், உரிய அனுமதியுடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், இதுபோன்ற சட்டவிரோதமான பந்தயங்கள் தொடர்வது, விலங்குகளின் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.