கொரோனா பெயரில் புதிய படிப்புகள்! – திறந்தநிலை பல்கலைகழகம் அறிமுகம்!

ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (10:20 IST)
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில் கொரோனா தொடர்பான படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2019 இறுதியில் பரவத்தொடங்கி உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்து இன்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலக நாடுகள் தடுப்பூசி போடுவதன் வாயிலாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் கோவிட்19 பற்றிய விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு என்ற பெயரில் இரண்டு புதிய சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாதம் மற்றும் 4 மாதம் என இரு வகையாக உள்ள இந்த சான்றிதழ் படிப்புகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்