பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (08:06 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது 
 
இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில் இந்தியாவில் ஒரே விலையில் 150 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை விற்பனை ஆகி வருவது மத்திய அரசின் உரிய நடவடிக்கை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்