இன்று சென்னை வருகிறது 5 லட்சம் தடுப்பூசிகள்: தட்டுப்பாடு இனி இருக்காது என தகவல்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (08:10 IST)
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று 2 ஆயிரத்துக்கும் குறைவான பொதுமக்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு தடுப்பு ஊசி செலுத்தப்படுவதும் ஒரு காரணம். ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி பற்றாக்குறை அவ்வப்போது ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது 
 
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த தடுப்பூசிகள் சென்னைக்கு வர உள்ளதாகவும் அதன்பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்