தமிழகத்தில் 3200 அரசு பேருந்துகள் சேவை ரத்து

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (16:45 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வருவாய் இல்லாத வழித்தடங்களில் இயங்கும் 3200 அரசு பேருந்துகளை நிறுத்தியுள்ளது.


 

 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னும் போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
 
டீசல் மீதான வாட் வரி உயர்வால் ஒய்வூதியம் கூட கொடுக்க முடியாத நிலையில் போக்குவரத்து கழகங்கள் உள்ளன. நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு சிக்கன நடிவடிக்கைகளை மேற்கொள்ள போக்குவரத்து கழகங்கள் முடிவுசெய்துள்ளன.
 
அதன்படி வருவாய் இல்லாத தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதில் தமிழகம் முழுவதும் 3200 பேருந்துகளை நிறுத்தியுள்ளன. 
அடுத்த கட்டுரையில்