சிறையில் அழகிகளுடன் ஆட்டம் போட்ட போலீஸ் வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (15:54 IST)
ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறை சாலையில் நடன அழகிகளுடன் ஆட்டம் போட்ட காவல்துறை அதிகாரி அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். 


 

 
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள சிறை சாலையில் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. இந்த கலை நிகழ்ச்சியில் நடன அழகிகளை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர். அந்த நடன அழகிகளுடன் சேர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவர் சீருடையில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
 
இந்நிலையில் இச்சம்பவம் தொரட்பாக விசாரணை நடத்த மாநில சிறைத்துறை ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரணையில் சிறை வார்டன் சத்வான் சிங் நடன அழகிகளை அழைந்தது வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

நன்றி: mh1 NEWS
அடுத்த கட்டுரையில்