டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (12:58 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடக் கோரி சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வின் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என #wewantgroup4result என்ற ஹேஷ்டேக்கை விண்ணப்பதாரர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த வதந்தி சமீபத்தில் வெளியான நிலையில் வதந்தியை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.
 
மேலும் தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் 36 லட்சத்துக்கும் மேலான விடைத்தாள்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் அவகாசம் தேவை என்றும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் பள்ளி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்