நான் நக்ஸலைட் ஆதரவாளனா? அமித்ஷா குற்றச்சாட்டு குறித்து துணை ஜனாதிபதி வேட்பாளர் விளக்கம்!

Prasanth K

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (09:04 IST)

இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சுதர்சன் ரெட்டி, தன்மீது அமித்ஷா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸின் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சுதர்ஷன் ரெட்டி நக்ஸல்களுக்கு ஆதரவானவர். சல்வா ஜூடும் தீர்ப்பை வழங்கியவர். அன்று அவர் அந்த தீர்ப்பை வழங்காமல் இருந்திருந்தால் 2020ம் ஆண்டிலேயே நக்ஸல் பயங்கரவாதம் முடிவுக்கு வந்திருக்கும்” என குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் ஒரு பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்த சுதர்சன் ரெட்டி “ஒரு நீதிபதியாக அரசியல் சாசனத்தை பாதுகாத்தேன். மாவோயிஸ்டு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு 40 பக்கங்கள் கொண்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா அந்த தீர்ப்பினை படித்திருந்தால் நான் நக்ஸலைட்டுகளை ஆதரிப்பவன் என கூறியிருக்கமாட்டார். மேலும் அந்த தீர்ப்பு எனது தனிப்பட்ட தீர்ப்பு அல்ல. அது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு எனவே அதை விட்டுவிடுவோம். விவாதத்தில் கண்ணியமாக நடந்துக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்