குரூப் 1, 1ஏ தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:43 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ  தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
குரூப்-1, 1ஏ தேர்வு ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் இடம்பெறுகின்றன.
 
இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-1 முதல் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருத்துவதற்கு மே 5ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
குரூப்-1 முதல் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெறும். எனவே, குரூப்-1 மற்றும் குரூப்-1 முதல் தேர்வு எழுத தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்