தேர்வர்கள் ஆதாரை இணைப்பது கட்டாயம்! – டிஎன்பிஎஸ்சி திடீர் அறிவிப்பு!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (08:22 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்துள்ள தேர்வர்கள் ஆதாரை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் பலர் பங்கேற்று தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதற்கு ஆன்லைனில் ஓடிஆர் கணக்கு தொடங்குவது அவசியமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி தேர்வர்கள் தங்கள் ஓடிஆர் கணக்கில் அதார் எண்ணை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஓடிஆர் மூலமாகவே தேர்வுக்கு விண்ணப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்