இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் குறித்த தமிழக அரசின் அரசாணையில், உற்பத்தி, வணிகம், சேவை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு தடையில்லாச்சான்று, ஒப்புதல் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.