வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

Mahendran
திங்கள், 1 ஜூலை 2024 (10:34 IST)
குற்றாலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளை குறிப்பாக பழைய குற்றாலம் பகுதியை வனத்துறை இடம் ஒப்படைக்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கடந்த மே மாதம் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை அடுத்து, பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க பரிசீலனை தீவிரமாக நடைபெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.
 
பழைய குற்றாலம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் நெகிழியை முற்றிலும் ஒழிக்கும் வகையில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்க மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
மேலும் பழைய குற்றால அருவி வனத்துறை வசம் சென்றால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து பழைய குற்றாலம் பகுதியை வனத்துறை இடம் தமிழக அரசு ஒப்படைக்குமா அல்லது தற்போதுள்ள நிலைமையே தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்