வெள்ளப் பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது- வனத்துறை அறிவிப்பு!

J.Durai

புதன், 26 ஜூன் 2024 (15:05 IST)
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும்இந்நிலையில் நேற்று பெய்த  கனமழை. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
 
இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் எனவும் வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். 
 
இப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாகவும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம் குட்டைகள் ஆகியவை நிரம்பி வருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்