பணியின்போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம்: தமிழக அரசின் அரசாணை

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:20 IST)
தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் இதுவரை 3 லட்சம் மட்டுமே குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
செப்டம்பர் மாதம் முதல் இதற்காக அரசு ஊழியர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூபாய் 110 பிடித்தம் செய்யப்படும் என்றும் இதுவரை ரூபாய் 60 மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு வந்ததாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது ]
 
தமிழகத்தில் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
திமுக ஆட்சி எப்போது வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு சாதகமான முடிவை எடுக்கும் என்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்