ஆசிரியர் தகுதித்தேர்வு ஆயுள் முழுவதும் செல்லும்: அரசாணை வெளியீடு!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:45 IST)
ஆசிரியர் தகுதி தேர்வு வாழ்நாள் முழுவதும் செல்லும் என அறிவிக்கப்பட்டதோடு இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 
 
இந்த அரசாணையில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்
 
மேலும் இதற்காக தனி சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்ற நிலை இருந்த நிலையில் அதனை மாற்றி தற்போது ஆயுள் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றது செல்லும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து தற்போது தமிழக அரசும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்