பாடநூல் கழக குழுவில் சுப.வீரபாண்டியனுக்கு பொறுப்பு! – தமிழக அரசு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (13:29 IST)
தமிழக பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவுரை குழுவில் சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் தமிழக பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டார். தற்போது அதை தொடர்ந்து தமிழக பாடநூல் கழக அறிவுரைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திராவிடர் கழகத்தை சேர்ந்தவரான சுப.வீரபாண்டியன் அரசியல், இலக்கியம் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்