கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

Mahendran

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (12:12 IST)
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் வகையில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான புதிய வழித்தடத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.  
 
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம் சுமார் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது. இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 9,928 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மூன்று மேம்பால சாலைகள் கட்டப்பட உள்ளன. கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக சென்று பட்டாபிராமில் முடிவடையும்.
 
இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசும், தமிழக அரசும் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தன. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்குவதற்காக 2,442 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, திட்டப் பணிகளை விரைந்து தொடங்க உதவும்.  
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்