கடந்த சில நாட்களாக குறைவாக இருந்த தக்காளி விலை, தற்போது திடீரென உயர்ந்துள்ளது, இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. கர்நாடக மாநிலத்தில் ரூ.10-க்கு விற்பனையானதால், விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் விட்டதாகவும், அறுவடை செய்த தக்காளியைக் கீழே கொட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரே நாளில் தக்காளி விலை மேலும் ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையாகி வருகிறது.