எங்கெங்கு காணினும் மழை நீர் - மௌனப்புரட்சியில் தமிழக மக்கள்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (11:13 IST)
மழை !  மழை நீர் ! எங்கு காணினும் மழை நீர் ! எங்கெங்கு காணினும் மழை நீர் !


 


பருவ மழையின் தொடக்கத்திலே தத்தளிக்கும் தலைநகரம். ஒரு அரசின் அலட்சியம்.  மக்கள் அகதிகள் ஆக நிற்கிறார்கள். வெவ்வேறு துறைகளை ஒருங்கிணைக்க திணறும் ஒரு அரசு, அடுத்து அடுத்து வரும் புயல்கள் சென்னை வாசிகளை  பயமுறுத்துகிறது.
 
துன்பம் என்னும் யாழ் சென்னையை சூழ்ந்து உள்ளது. முன்னேற்பாடுகள் இல்லாத ஒரு அரசு, தனது மக்களை மீண்டும் தெருவில் நிறுத்தி இருக்கிறது. மரணம் என்னும் தூது வந்தது கொடுக்கையூரில் இரு தளிர்களுக்கு அது அரசின் வடிவில் வந்தது.  இந்த ஆட்சியாளர்களால், சாமானிய மக்கள் வசிக்கவே முடியாத இடமாய்  மாற்றப்பட்டுவிட்டது சென்னை.  


 

 
பிரச்சனை பருவ மழை அல்ல ! இந்த அரசு அதை எதிர் கொள்ளும் விதம்! இந்த அரசு என்பது மக்களை காக்க வல்லாத அரசு. முற்றும் செயல் இழந்து விட்ட ஒரு அரசினால் மக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். இந்த  அரசின் கையாலாகாதனம் முடிச்சூர், தாம்பரம் உட்பட சென்னையின் புற நகர் முழுவதும் தெரிகிறது.
 
வழக்கம் போல இந்த வருடமும் வெள்ளத்துக்கு படகுகளிலிருந்து, உணவுவரை தயாராக இருக்கிறது. ஆனால், ஒரு தடவைகூட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் தூர்வாரப்பட்டு தயாராக இருப்பதேயில்லை. அதன் ரகசியம் என்ன ? சிதம்பர ரகசியமா இல்லை பழனிசாமி ரகசியமா?
 
மாண்புமிகு அமைச்சர் செங்கோட்ட்டையன் அவர்களே! ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக சிக்கல் இருக்குமே எனில் உங்களுக்கு எதற்கு ஆட்சி? எதற்கு அதிகாரம்?
 
மாண்புமிகு அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே! மக்கள் எதிர்பார்ப்பது உங்களின் விளக்கங்களை அல்ல! களத்தில் உங்களின் செயல்பாடுகளை!  
 
மக்கள்  மௌனம் களையும் வரை எங்களை ஆளுக! அதுவரை தான் இந்த ஆட்சியின் நாட்கள்.

இரா காஜா பந்தா நவாஸ்
Sumai244@gmail.com
 









#Chennairain
#TAMILNADU
#TNPOLITICS

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்