கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 10,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்பத்தின் பேரில் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பறையிம் மொத்த மாணவர் எண்ணிக்கையில் பாதி பேர் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே சுழற்சி முறையில் ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமும் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தலைமை ஆசிரியர் பெயரில் அனுமதி கடிதம் பெற்றோரிடம் பெற்று பள்ளியில் சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வரவில்லையென்றும் கூறப்படுகிறது.