அதில், செயற்குழுபின் துணைமுதல்வர் ஓபிஎஸ் என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா என்றும், உங்களை முதல்வராக்கியது சசிகலா என்று பேசியதாகவும் ,இதற்குப் பதிலடி கொடுத்த இபிஎஸ் நம் இருவரையும் முதல்வராக்கியது சசிகலா என்று பதிலடி கொடுத்ததாகவும் தெரிகிறது.
செயற்குழு கூட்டத்திற்குப் பின், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் அக்டோபர் 7ம் தேதி யார் முதல்வர் வேட்பாளார் என்பதை அறிவிப்பார்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.