எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் முதலமைச்சர் தனது அமைச்சர்கள் குழுவோடு நேரில் சென்றிருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்தனர். தமிழக முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் யாரும் இதுவரை தூத்துக்குடிக்கு சென்று பார்வையிடவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி கேட்கப்பட்டது. முதலைமைச்சர் எள்ளவவு எதிர்ப்பு வந்தாலும் தனது அமைச்சர்கள் குழுவுடன் சென்றிருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் தூத்துக்குடியில் தற்போது 144 சட்டம் அமலில் உள்ளது. இதனால் தூத்துக்குடிக்கு பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ர அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.