தூத்துக்குடி செல்வது குறித்து தலைமை முடிவு செய்யும்: பொன்னார்!

புதன், 23 மே 2018 (15:58 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்  தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். 
 
அவர்களை போலீசார் தடுக்க முயன்று, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியாகினர். இந்த சோகத்தில் இருந்த பலர் மீளாத நிலையில், இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். 
 
இந்நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்வருமாரு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தூத்துக்குடிக்கு இப்பொது செல்லும் திட்டமில்லை. பாஜக சார்பில் தூத்துக்குடி செல்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். 
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் பாஜக போராட்டம் நடத்திய போது மக்கள் ஆதரித்திருந்தால் இன்று 12 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.  
 
ஆலைக்கு அன்று அனுமதி கொடுத்தல் உள்ளிட்டவை திமுக உட்பட மற்ற கட்சிகள் செய்த தவறு. தூத்துக்குடி சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால், இதன் பின்னணி குறித்து முழுமையாக தெரியாமல் பேச முடியாது என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்