சிங்கக்குட்டிக்கு 'விஷ்ணு' என்ற பெயர் வைத்த முதல்வர் பழனிச்சாமி

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (12:21 IST)
கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பெண் சிங்கக்குட்டி ஒன்றுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா 'ஜான்சி' என்ற பெயரை வைத்தார். இந்த நிலையில் ஜான்சி சமீபத்தில் கர்ப்பமாகி குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த சிங்கக்குட்டிக்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'விஷ்ணு' என்ற பெயரை வைத்துள்ளார்.


 


வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் ஆராய்ச்சி மையத்தையும் இன்று முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் பூங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முதல்வர், அங்குள்ள தொழிலாளிகள், தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் வண்டலூரில்  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமியிடம்,  அங்குள்ள தொழிலாளிகள், தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்