18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை

புதன், 4 அக்டோபர் 2017 (06:25 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என கவர்னரிடம் தனித்தனியாக கூறிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறினார். ஆனால் ஜக்கையன் என்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ தவிர மீதி 18 பேர் நேரில் விளக்கம் அளிக்காததால் 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி சபாநாயகர் உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த மாதம் சென்னை ஐகோர்ட்டில் வந்தபோது நீதிபதி துரைசாமி, 18பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது என்றும், அதே நேரத்தில், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்