முன்கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Mahendran

புதன், 14 மே 2025 (11:24 IST)
சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்த கட்டமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தை பொருத்தவரை, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், கடந்த 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது என்பதும் தெரிந்தது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள், அதாவது மே 16ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது 3 நாட்கள் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மே 16ஆம் தேதி காலை 10ஆம் வகுப்பு முடிவுகளும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்