அடுத்த மாதமும் ஊரடங்கா? நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:44 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக 7ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இருப்பினும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதால் பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் உட்பட அனைத்தும் இயங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபந்தனைகளுடன் செப்டம்பர் 29ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை செய்ய உள்ளார் 
 
இந்த ஆலோசனையின் போது ஊரடங்கு மேலும் அக்டோபர் மாதம் நீட்டிக்கலாமா? அல்லது மேலும் சில தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. இன்னும் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவுகள் நீடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்