தமிழகத்தில் இன்றுமுதல் நகரும் ரேசன் கடைகள்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

திங்கள், 21 செப்டம்பர் 2020 (07:28 IST)
தமிழகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் 33,000 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் நகரும் ரேசன் கடைகள் தொடங்கவுள்ளது
 
முதல்கட்டமாக திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை ஏற்கனவே தொடங்கப்பட்டு  வேன்கள் மூலம் ரேசன் அட்டைதாரரின் வீடுகளுக்கே சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
 
இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 3,501 நகரும் ரேஷன் கடைகளை தொடங்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
 
இதன்படி நகரும் ரேஷன் கடை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு  சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார் என்பதும் இந்த திட்டத்திற்கு 9.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்