குரங்கணி காட்டுத்தீ: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!

திங்கள், 12 மார்ச் 2018 (20:03 IST)
தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுக்கு சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு புரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 27 பேரை மீட்டனர். 
 
ஆனால், பதட்டத்தில் பள்ளத்தாக்கில் விழந்த 9 பேரை மீட்க முடியவில்லை. எனவே, அவர்கள் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

நிவாரண நிது குறித்து முதல்வர் கூறியதாவது, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடையதவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்