ஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டசபை : எம்.எல்.வாக நுழையும் தினகரன்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (11:31 IST)
பரபரப்பன அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை வருகிற ஜனவரி 8ம் தேதி கூட இருக்கிறது.

 
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரை இடம் பெறும் எனத் தெரிகிறது. அவர் ஆளுநராக பொறுப்பேற்ற பின் சட்டசபையில் ஆற்றப்போகும் முதல் உரையும் இதுதான்.
 
இந்த முதல் சட்டப்பேரவை கூட்டம் 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. இதில், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரன், முதல் முறையாக எம்.எல்.ஏ. வாக இதில் கலந்து கொள்ள இருக்கிறார்.
 
ஆனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் சட்டசபைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூடுவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்