ஓ.. நீங்க சரக்குல திருக்குறளா அச்சிட்டு வித்தீங்க? – சட்டசபையில் காரசார விவாதம்!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (13:50 IST)
தமிழகத்தில் மது விற்பனை குறித்து தமிழக சட்டசபையில் எழுந்த கேள்வி வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளது குறித்த விவாதம் எழுந்தது.

கடந்த ஆண்டுகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசிய திமுக எம்.எல்.ஏ “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு என மது பாட்டில்களில் அச்சடித்துவிட்டு அதை அரசே விற்பனை செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தங்கமணி ”2006 – 2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோதும் மது விற்பனை இருந்தது. அப்போது மதுப்பாட்டில்களில் திருக்குறளையா அச்சிட்டு விற்பனை செய்தீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார். இதனால் சிறிதுநேரம் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்