கடனே பெறாத விவசாயி வங்கிக்கணக்கில் பணத்தை எடுத்து எஸ்பிஐ: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (10:07 IST)
பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு அந்த கடனை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுகின்றனர். உள்நாட்டில் இருந்தாலும் அவர்கள் மீது வங்கி நிர்வாகம் பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிய ஏழை எளிய விவசாயிகளிடம் வங்கிகள் கறாராக கடனை வசூலித்து வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் திருவாரூரை சேர்ந்த பாண்டியன் என்ற விவசாயி வங்கியில் கடன் எதுவும் பெறாத நிலையில் அவர் ரூ.3.90 லட்சம் கடன் பெற்றதாக பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பைசா கூட கடன் பெறாத அந்த விவசாயி வங்கிக் கணக்கில் இருந்த ரூ.4,600 எடுக்கப்பட்டதாகவும் விவசாயி பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதுகுறித்து வங்கி நிர்வாகம் விசாரணை செய்து வருவதாகவும், கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால் வேறொருவர் வாங்கிய கடன் விவசாயி பாண்டியன் வாங்கியதாக பதிவு செய்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்