ஒழுங்கா நீங்களே குடுத்துட்டா நடவடிக்கை கிடையாது! – திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:29 IST)
கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் தாமாக முன் வந்து பணத்தை அளிக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டம் மூலம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மாதம்தோறு 6 ஆயிரம் நிதியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் விவசாயி இல்லாத பலரும் முறைகேடாக பணம் பெற்று வருவது தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் முதற்கட்ட சோதனையில் 13 மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்தன் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் 15 நாட்களுக்கு பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தொகையை செலுத்தாமல், பின்னர் முறைகேடு கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்