திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்! குவியப்போகும் பக்தர்கள்! - சிறப்பு பேருந்துகள், ஏற்பாடுகள் தீவிரம்!

Prasanth Karthick

வெள்ளி, 2 மே 2025 (10:09 IST)

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

 

சித்திரை மாதம் என்றாலே தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் விழாக்கோலம்தான். சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி என பல திருக்கோவில்களிலும் திருவிழாக் கோலமாக காணப்படுகிறது. முக்கியமாக சித்திரை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கமாக உள்ளது.

 

இந்த முறை சித்ரா பௌர்ணமி கிரிவலம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது. விடுமுறை காலம் என்பதால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே குடிநீர் வசதியை அமைத்தல், அன்னதான ஏற்பாடுகள், தேவையான இடங்களில் கழிவறைகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், எஸ்.பி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

சித்ரா பௌர்ணமியையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்