திருப்பூர் மண்டல அளவிலான சாரண, சாரணியர்களுக்கான திறனறிதல் போட்டி

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (00:02 IST)
அண்மையில் நடைபெற்ற திருப்பூர் மண்டல அளவிலான சாரண, சாரணியர்களுக்கான திறனறிதல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சாரண, சாரணியர்கள் பங்கேற்றனர். சாரணர் முகாம் கலை, முதலுதவி பயிற்சி, ஆக்கல் கலை, திசை அறியும் பயிற்சி, மதிப்பீட்டுத்திறன், சீருடை அணி  திறன், கலைத் திறன்கள், வனக்கலை மற்றும் சமைக்கும் திறன் போன்ற பல்வேறு திறன்களின்  அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
 
இதில் சாரணர்களுக்கான பிரிவில் பரணிபார்க் மாவட்டத்தைச் சேர்ந்த சாரணர்கள் விகாஷ் நேத்ரன், தனிஷ், ருத்தேஷ், தர்ஷன், பஷித் முகமது, சூர்யா, கணேஷ், ராகமித்திரன் மற்றும் சாரண ஆசிரியர் ஆனந்த கேத்ரின் ஆகியோர் முதலிடமும் சாரணியர்களுக்கான பிரிவில் மிதா, பிரியங்கா, விதுலாஸ்ரீ, பவித்ரா, சகானா, சஷ்டிகா, அனகலட்சுமி, பிரனிதாஸ்ரீ மற்றும் சாரணிய ஆசிரியர் சித்ரலேகா ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
 
 வெற்றி பெற்ற சாரண, சாரணியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் சாரண இயக்கத்தின் முதன்மை ஆணையரும், பரணி பார்க் பள்ளி தாளாளருமான S. மோகனரங்கன் தலைமை தாங்கினார். பரணி பார்க் சாரணிய ஆணையரும், பள்ளியின் செயலாளருமான திருமதி.பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் சாரண ஆணையரும் பள்ளியின் முதன்மை முதல்வருமான முனைவர் C.ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, பரணிபார்க் முதல்வர் K. சேகர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரணி பார்க் மாவட்ட செயலாளரும் திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளருமான R.பிரியா செய்திருந்தார்.
 
[18/03, 23:24] Anandakumar Karur: மண்டல அளவில் வெற்றி பெற்ற சாரண, சாரணியருடன் பரணி பார்க் சாரண இயக்கத்தின் முதன்மை ஆணையரும் பரணி பார்க் பள்ளி தாளாளருமான S. மோகனரங்கன் சாரண ஆணையரும் பள்ளியின் முதன்மை முதல்வருமான முனைவர் C. ராமசுப்ரமணியன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்