மன உளைச்சலில் இருந்து மீட்கும் ராஜா, ரகுமான் இசை: கொரோனா வார்டில் இசை மழை!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (15:30 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் இருக்க திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மெல்லிசை பாடல்கள் ஒலிபரப்பப்படும் செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நாள்தோறும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா சிறப்பு வார்டில் வாரக்கணக்கில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் பல வாரங்கள் அவர்கள் வார்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டியுள்ளதால் மன உளைச்சல் ஏற்படுகிறது.

உலக அளவில் தனித்துவிடப்படுவதால் ஏற்படும் மன உளைச்சலை போக்க மருத்துவ நிபுணர்கள் பல்வேறு யோசனைகளை வழங்கி வருகின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று இசை. கொரோனா வார்டில் உள்ளவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் இருக்க ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் மெல்லிசை பாடல்களை ஒலிக்கவிட்டு வருகிறதாம் திருப்பத்துர் அரசு மருத்துவமனை. இளையராஜா, ஏஆர்ரகுமான் ஆகியவர்களின் மெல்லிசை பாடல்களை தேர்ந்தெடுத்து ஒலிபரப்பும் நிலையில் அதற்கு ஆதரவு உள்ளதாகவும், நோயாளிகள் யாருக்கேனும் இதில் சங்கடங்கள் இருந்தால் உடனே இசை நிறுத்தப்படுவதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்