அப்போ மகளிர் குழு.. இப்போ ஸ்டார்ட் அப் நிறுவனம்! – சாதித்த நெல்லை பெண்கள்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (15:32 IST)
திருநெல்வேலியை சேர்ந்த பெண்கள் மகளிர் உதவி குழு தொடங்கி உயர்ந்து தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாறியுள்ளனர்.

இந்தியா முழுவதும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறாக வழங்கப்படும் உதவி திட்டங்களில் ஒன்று சுய உதவிக்குழு. பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று பின்னர் அதை தவணை முறையில் அடைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக சுய உதவிக்குழுக்களாக தொடங்கியவை ஸ்டார் அப் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. திருநெல்வேலியை சேர்ந்த 13 பெண்கள் சுய உதவிக்குழுக்கள் கடன் வாங்கி அதன் மூலம் சேர்ந்து சிறு சிறு தொழில்களை செய்ய தொடங்கியுள்ளனர்.

பனை ஓலை பெட்டிகள், நவதானியங்கள், ஆயத்த உடைகள் என பல்வேறு தயாரிப்புகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் வெளிமாநிலங்கள் வரை விற்பனை செய்து லாபம் ஈட்டியுள்ளனர். அவ்வாறாக மகளிர் சுய உதவி கடனால் தொடங்கப்பட்டு தற்போது அவை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் மகளிர் உதவிக்குழுக்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக வளர்ச்சியடைவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. அந்த பெண்களின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்