தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான நெப்போலியன் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்தார். தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தசாவதாரம், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர் சிறந்த நடிகர், சிறந்த அரசியல்வாதி, சிறந்த பிசினஸ் மேன் என்பதையும் தாண்டி சிறந்த கணவர் மற்றும் சிறந்த அப்பா.
தன் மகன் 10 வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்துவிட்டார். அந்த சமயத்தில் நிறைய வைத்தியம் பார்த்துள்ளார். அப்படித்தான் தமிழகத்தில் திருநெல்வேலி பக்கத்தில் பாரம்பரிய வைத்தியம் செய்பவர் பற்றி அறிந்து தனது மகனை அழைத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு போதிய வசதி இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதை அறிந்த அவர் அங்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெரிய மருத்துவமனை காட்டியுள்ளார். அங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பணம் வாங்குவதே இல்லையாம்.