ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.. அடித்து கூறிய திருநாவுக்கரசர்..!

திங்கள், 26 ஜூன் 2023 (07:50 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் அடித்துக் கூறியுள்ளார். 
 
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தினால் ராகுல் காந்தியின் இமேஜ் உயர்ந்துள்ளது என்றும் அவர் பிரதமர் வேட்பாளருக்கான தகுதியை பெற்றுவிட்டார் என்றும் கூறினார். 
 
அதுமட்டுமின்றி உலக தலைவர்கள் வரிசையில் அவர் இடம்பெற்றுள்ளார் என்றும் ஒரு சில கட்சிகள் அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள விட்டாலும் தேர்தலுக்குப் பின் அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ராகுல் காந்தி தான் பிரதமராக ஆகவேண்டும் என்று மக்களுடைய எதிர்பார்ப்பு இருக்கிறது என்றும் எனவே ராகுல் காந்தி கண்டிப்பாக தேர்தலுக்குப் பின் பிரதமராக வருவார் என்றும் அவர் கூறினார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மற்ற அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்