மணமகனுக்கு பிரதமர் பெயர் கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

ஞாயிறு, 25 ஜூன் 2023 (09:10 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண மேடையில் பிரதமர் பெயர் கூட தெரியவில்லை என்று கூறிய மணமகனை திருமணம் செய்ய மணமகள் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்திற்காக மணமேடைக்கு இருவரும் வருகை தந்தனர். 
 
அப்போது மணமகள் மணமகளிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிய போது நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார். ஆனால் மணமகன் அதற்கு பதில் தெரியாததால் திணறிய நிலையில் நாட்டின் பிரதமர் யார் என்ற அடிப்படை விவரங்கள் கூட தெரியாத ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று மணப்பெண் ரஞ்சனா மறுத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து இரு வீட்டார் ஆலோசனை செய்த பிறகு மணமகனின் சகோதரர் ஆனந்த் என்பவருக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்