திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பதட்டமின்றி புனித நீராடிய பக்தர்கள்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:40 IST)
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பதட்டமின்றி புனித நீராடிய பக்தர்கள்..!
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கிய நிலையில் எந்த விதமான பதட்டமும் இன்றி பக்தர்கள் கடலில் புனித நீராடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திருச்செந்தூர் கடல் அவ்வப்போது உள்வாங்கி வருகிறது என்பதையும் சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களுக்கு அது சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்று முன்னர் கோயில் அருகே திடீரென 25 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. திருச்செந்தூர் கடல் உள்வாங்கிய போதிலும் எந்தவிதமான பதட்டமும் இன்றி பக்தர்கள் கடலில் புனித நீராடியதாக கூறப்படுகிறது. 
 
மேலும் கடல் உள்வாங்கிய நிலையில் கடல் பாறைகள் இடையே உள்ள சங்குகள், சிப்பிகள் ஆகியவற்றை பக்தர்கள் சேகரித்து வரும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்