மதுப்பிரியர்கள் மேல கை வெச்சா..? சரக்கை பிடுங்கி சென்ற காவலர்கள் கைது!

Webdunia
புதன், 20 மே 2020 (11:56 IST)
தமிழக எல்லையில் மது அருந்தி கொண்டிருந்த மது பிரியர்களிடம் மது பாட்டில்களை பிடுங்கிய புதுச்சேரி போலீசார் கைது செய்யப்பட்ட விவகாரம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழக மதுப்பாட்டில்கள் புதுச்சேரிக்குள் கொண்டு செல்லாமல் இருக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் பகுதிக்கு உட்பட்ட சித்தலம்பட்டியில் சிலர் மது பிரியர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு சென்ற புதுச்சேரி காவலர்கள் நான்கு பேர் அவர்களிடமிருந்து மதுப்பாட்டில்களை பிடுங்கி கொண்டு, அவர்களை அடித்து விரட்டியுள்ளனர்.

இதுகுறித்து மதுப்பிரியர்கள் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, காவலர்கள் நான்கு பேரும் தங்கள் தேவைக்காக மதுவை அவர்களிடமிருந்து பிடுங்கி சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நான்கு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நான்கு காவலர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிசு செய்யப்பட்டுள்ளது. மூன்று காவலர்கள் கது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மட்டும் தப்பி தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மதுப்பிரியர்களை தாக்கிய போலீஸார் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்