தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (08:23 IST)
கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் புதிது புதிதாக பாதிக்கப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பும் நேர்ந்து வருகிறது. இந்த நிலையில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவிலும், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு பெருமளவு பாதிப்பு குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த மூவரில் 18 வயது இளைஞர் ஒருவர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி
 
18 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், துபாயில் இருந்து சென்னை திரும்பிய 63 வயது நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 66 வயது நபர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த பத்து நாட்களுக்கு முன் தமிழகம் வந்த இவர் தற்போது பெருந்துறை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மூவரின் உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்