கனமழை எதிரொலி: பள்ளிகள் எந்தெந்த மாவட்டத்தில் விடுமுறை?

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (07:53 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் நல்ல மழை பெய்தது
 
மேலும் வங்ககடலில் சிட்ரங் என்ற புயல் தாக்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் இன்றும் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
 
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
அதுமட்டுமின்றி கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
மேலும் சில மாவட்டங்களில் இருந்து பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்