வங்க கடலில் புதிய புயல்: தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு?
வியாழன், 20 அக்டோபர் 2022 (21:53 IST)
வங்க கடலில் புதிய புயல் தோன்றி உள்ளதை அடுத்து தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பது குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானதை அடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக வரும் 23ஆம் தேதி புயலாக வலுவடைய வாய்ப்பு இருப்பதால் இந்த புயலுக்கு சிட்ரங் என்று பெயர் வைக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த புதிய புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதேபோல் ஆந்திர கடலோர பகுதி புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
புதிய ப்புயல் காரணமாககடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது