மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் இன்று திமுக தலைவர் கருணாநிதி அவர்களை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்தார்
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக வயோதிகம் காரணமாக பூரண ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், நேற்று மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் நேற்று மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய திருமாவளவன் இன்று கருணாநிதியை நேரில் சந்தித்தார்., இந்த சந்திப்பில் கருணாநிதியின் உடல்நிலையை மட்டும் திருமாவளவன் விசாரித்ததாகவும் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருக்கும் திருமாவளவன், அதிமுக இரண்டாக உடைந்துவிட்டதால் அந்த பக்கமும் போக முடியாமல் உள்ளார். எனவே அவர் திமுகவுடன் நெருங்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.