ஆப்பிளில் இருந்து காதுகள் தயாரிக்கும் அதிசயம்

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (20:10 IST)
காதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும் என்கிறார் கனடா நாட்டு விஞ்ஞானி.சேதமடைந்த மனித செல்களுக்கு பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களை, மாற்று மனித உடலுறுப்புகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது மட்டுமல்ல அதிக செலவு பிடிக்கக்கூடியது.


 

கனடாவை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி செலவுகுறைந்த மாற்று உடலுறுப்புகளை ஆப்பிள் மூலம் உருவாக்கியுள்ளார்.ஆப்பிளிலிருந்து காதுகளை வளர்த்தேன் என்கிறார் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங். ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் துணைப்பேராசிரியராக பணிபுரிகிறார் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங்.

"விலை மலிவான சிறந்த மூலப்பொருளை நாங்கள் கண்டெடுத்திருக்கிறோம். இதன் விலை மிக மிக மலிவு. இதிலிருந்து நீங்கள் பலவற்றை உருவாக்கலாம்; மனிதஉடலில் பொருத்தலாம்; உடலும் இதை ஏற்றுக்கொள்ளும்" முதலில் ஆப்பிள்கள் தேவையான உடல் உறுப்பின் உருவில் செதுக்கப்பட்டு அதன் மரபணுக்கள், செல்கள் அனைத்தும் நீக்கப்படும்.
இறுதியில் நாரிழை கட்டமைப்பு மட்டும் மிஞ்சும்; இந்த நாரிழைக்கட்டமைப்பில் மனித மரபணுக்கள் பற்றி வளரும்.

சோதனைச்சாவடியில் உரிய உபகரணங்கள் கொண்டு மனிதசெல்கள் வளர்க்கப்படும் அது காதாக உருவெடுக்கும். இந்த காதுகளை விலங்குகளின் உடல் ஏற்றுக்கொண்டதை பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக பெல்லிங் கூறுகிறார்.

இந்த பரிசோதனையின் பாதுகாப்பு, நடைமுறை சாத்தியம் குறித்து மருத்துவ பரிசோதனைகள் நடக்கவுள்ளன.அதில் வெற்றி கிட்டினால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இது மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் சேதமான உடலுறுப்புகள் மட்டுமல்லாமல் பிறவியில் இல்லாத உடலுறுப்புகளை உருவாக்குவது கூட எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.
அடுத்த கட்டுரையில்