கோவிலுக்குள் வைத்து பணப்பட்டுவாடாவா? தர்மபுரியில் பரபரப்பு

திங்கள், 29 மார்ச் 2021 (20:17 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் ஒருபுறம் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில் தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் இதுவரை கோடிக்கணக்கான பணம் பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற தொகுதியில் கோவிலுக்குள் வைத்து பணப்பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கேபி அன்பழகன் ஆதரவாளர்கள் அங்கு உள்ள கோவில் ஒன்றில் வைத்து பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருவதாகவும் இது குறித்து புகார் அளித்தும் தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் திமுகவினர் புகார் அளித்துள்ளனர் 
 
கோவிலுக்குள் வைத்து பகிரங்கமாக பணப் பட்டுவாடா செய்து வருவதை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்