இந்நிலையில் தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈருபட்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் ”வறட்சியான தர்மபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி “அட இருப்பா.. பேசிட்டு இருக்கும்போது குறுக்க பேசாத.. கடைசியா கேள்வி கேட்க நேரம் தறேன்” என கூற, ஆனால் அந்த நபர் தொடர்ந்து கேள்வி கேட்டதால் கட்சி நிர்வாகிகள் அவரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.