ஒரு கவுன்சிலர் பதவிக்கு இத்தனை போட்டியா? – தருமபுரியில் பரபரப்பு!

வியாழன், 23 செப்டம்பர் 2021 (11:43 IST)
தருமபுரியில் காலியாக உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கு முக்கிய கட்சிகள் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தின் 18வது வார்டு கவுன்சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். தற்போது 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம் ஏனைய பகுதிகளில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று வரை மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாப்பிரெட்டிப்பட்டி 18வது வார்டில் போட்டியிட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்துள்ளார். இறுதி நாளான நேற்று அதிமுக, திமுக, பாமக, அமமுக, தேமுதிக கட்சிகளை சேர்ந்தவர்களும், மற்றும் சில சுயேட்சைகளுமாக மொத்தம் 12 பேர் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்